யாழ் மாநகர வர்த்தகர்களுடன் ஈ.பி.டி.பி விஷேட கலந்துரையாடல்!

யாழ் மாநகர வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு விசேட கலந்தரையாடல் ஒன்றை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
“யாழ். வர்த்தக சமூகத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற தலைப்பில் யாழ்ப்பாணத்தின் வர்த்தகர்கள் அண்மைக்காலமாக எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தடைகள் தொடர்பாக ஆரோக்கியமான கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கும்,அதில் எடுக்கப்படும் தீர்மானங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறும் இந்த கலந்துரையாடல் எதிர்வரும் 10 அம் திகதி மாலை 4 மணிக்கு கட்சியின் யாழ்ப்பாணம் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்கணராஜா மேற்கொண்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|