இலங்கை உலக நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக விளங்கும் ஜனாதிபதி!

Friday, May 12th, 2017

உலக நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக ஜனநாயகம் மிக்க நல்லிணக்கம் கொண்ட நாட்டை உருவாக்குவோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி பாராட்டி நோர்வூட் மைதானத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதே நாட்டிலுள்ள மிகப்பெரிய பிரச்சினையாகக் காணப்படுகிறது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். இம்மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதனை நோக்காகக் கொண்டு இந்த தேசிய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

பல தசாப்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களை போன்று மலையக மக்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே, வடக்கு, கிழக்கு மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதனை முக்கிய குறிக்கோளாக கொண்டு செயற்பட்டுவரும் இந்த அரசாங்கம், ஜனநாயகம் மிக்க நல்லிணக்கம் கொண்ட நாட்டை உருவாக்கி உலக நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழும்.

அதேவேளை, இந்த வைத்தியசாலையை எமக்கு அர்ப்பணித்த இந்திய அரசாங்கத்திற்கும், அதனை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Related posts: