ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின் – உப்புவெளி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் விஜயேந்திரன் மாஸ்டர் சந்திப்பு!
Monday, February 5th, 2018
தமிழரசுக்கட்சியின் உப்புவெளி பிரதேச மூத்த உறுப்பினரும் உப்புவெளி பிரதேச சபையின் முன்னாள் தலைவர்களில் ஒருவருமான விஜயேந்திரன் மாஸ்டர் அவர்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின் தலைமையிலான முக்கியஸ்தர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நேற்றையதினம் விஜயேந்திரன் மாஸ்டர் அவர்களது இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தற்போதை அரசியல் நிலைமைகள் தொடர்பாக இரு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இதன்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வீணை சின்னத்தின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்யுமாறும் தோழர் ஸ்ராலின் விஜயேந்திரன் மாஸ்டர் அவர்களிடம் கேட்டுக்கொண்டபோது நிச்சயமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
யாழ் மாநகர வர்த்தகர்களுடன் ஈ.பி.டி.பி விஷேட கலந்துரையாடல்!
பழிக்குப் பழிவாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு ஒருபோதும் இருந்தது கிடையாது -ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட ...
சுயநலன்களுடன் செயற்படாது அமைக்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து செயற்படுங்கள் - யாழ். பல்கலை ஜனநாயக ஊழ...
|
|
|


