சுயநலன்களுடன் செயற்படாது அமைக்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து செயற்படுங்கள் – யாழ். பல்கலை ஜனநாயக ஊழியர் சங்கத்தினரிடம் ஈ.பி.டிபியின் மாவட்ட நிர்வாக செயலாளர் ஜீவன் வலியுறுத்து!

Thursday, August 5th, 2021

தொழிலாளர்களின் நலன்களை முன்நிறுத்தி செயற்படுகின்ற தொழிற் சங்கங்களோ அன்றி அதன் நிர்வாகத்தினரோ தத்தமது சுயநலன்களை மையமாக கொண்டு செயற்படாது அது அமைக்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்  தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் மற்றும் உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோருடன் நேற்றையதினம் யாழ் பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்க நிர்வாகத்தினர் சந்தித்து தபமு பிரச்சினைகள் தொடர்பில்  கலந்துரையாடியிருந்தனர் இதன்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஊழியர்கள் தாம் தொழில் செய்யும் இடங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்வதற்கு ஒரு கட்டமைப்பை உருவாக்கி தத்தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு கொள்கின்றனர்.

அத்தகைய ஒன்றிணைந்த செயற்பாடுகளை சிலர் தமது சுயநலன்களுக்காக குழப்பங்களை ஏற்படுத்தவோ அன்றி பயன்படுத்துவதையோ எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது. அவ்வாறு தவறாக செயற்படும் ஊழியர் சங்கங்கள் தேவையற்றதொன்றாகவே எண்ணமுடிகின்றது.

அந்தவகையில் ஊழியர்களின் நலன்களை முன்நிறுத்தியதாக உறுதியுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் அந்த ஒன்றியங்கள் இயங்கவேண்டும்.

இந்நிலையில் தொழில் சார் ஊழியர்களின் நலன்களை முன்னிறுத்தியதான இந்த ஜனநாயக ஊழியர் சங்கத்தின் செயற்பாடுகள் மீண்டும் புத்துயிரளிக்கப்பட்ட திறம்பட செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்சந்திப்பின்போது யாழ் பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்க நிர்வாகத்தினர் தமக்கான செயற்பாடகளை முன்னெடப்பதற்கு ஏற்றவகையில் ஒரு இடவசதி இன்மை உள்ளிட்ட தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் தெரியப் படுத்தியிருருந்தனர்.

குறித்த பிரச்சினைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு காலக்கிரமத்தில் அதற்கான தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளதா மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   .

Related posts: