பல்கலை மோதல் இனவாத மோதல் அல்ல – உயர்கல்வி அமைச்சர்!

Monday, July 18th, 2016

நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதலானது இனவாத மோதல் அல்லவென உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறான மோதல்கள் சகல பல்கலைக்கழகங்களிலும் இடம்பெறுவதாகவும், அனைத்து மக்கள் மத்தியிலும் தீவிரவாதிகள் சிலர் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மோதலை அடுத்து அங்கு சகல பீடங்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல்கலைக்கழகத்தை மீள் திறப்பது குறித்து அனைத்து தரப்பினருடனும் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடலை அடுத்தே தீர்மானிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

சிறுவர் உளவியல் பற்றிக் கவனம் செலுத்தியே தரம் 5 பரீட்சை பற்றித் தீர்மானிக்க வேண்டும் - கல்வி அமைச்சர...
ஜனாதிபதி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் ...
இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 100 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் பெப்ரவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் விடு...