கிடைத்த சந்தர்ப்பத்தை என்னை தெரிவுசெய்த மக்களுக்காக பயன்படுத்தியுள்ளேன் – ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் வை.தவநாதன்

Wednesday, October 24th, 2018

மாகாணசபை முறைமையை எதிர்த்தவர்களாலும், ஏற்றுக்கொள்ளாதவர்களாலும் மாகாண நிர்வாகத்தை திறம்பட நடத்த முடியாது. அத்துடன் கட்சித் தலைமையை நிராகரித்து செயற்படும் உறுப்பினர்கள் சிலர் இந்த அவையில் இருக்கிறார்கள். அவர்களாலும் திறம்பட செயற்பட முடியாது. இதுவும் இந்த மாகாணசபை வினைத்திறனற்று தனது பதவிக்காலத்தை முடித்தமைக்கு ஒரு காரணைமாகும்.

மாகாண சபை உறுப்பினராக எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை என்னை தெரிவுசெய்த கிளிநொச்சி மாவட்ட மக்களுக்காக பயன்படுத்தியுள்ளேன். ஆனால் மாகாணசபை உறுப்பினராக தெரிவுசெய்யப்படுவதன் முன்னர் இதைவிட அதிக சேவையை எனது மாவட்ட மக்களுக்காக ஆற்றியுள்ளேன்.

தொடர்ந்தும் சேவை புரிவேன் என்பதையும் கூறிக்கொண்டு அடுத்து வரும் இரண்டாவது வட மாகாணசபையாவது மக்களுக்கான உச்சக்கட்ட பலாபலன்களை வழங்கக்கூடியவாறான சபையாக மக்களால் தெரிவுசெய்யப்பட வேண்டும் என மக்களை பணிவாகக் கேட்டுக்கொள்வதுடன் இடைப்பட்ட காலத்திற்கு  நிர்வாகத்தை தலைமை தாங்கப்போகும் கௌரவ ஆளுநர் அவர்களையும் பிரதம செயலாளர் அவர்களையும் எமது மக்களுக்கு வினைத்திறனான முறையில் சேவைகளை வழங்க வேண்டுமென்றும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாணசபையின் உறுப்பினருமான வை.தவநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்

முமுதலாவது வடக்க மாகாணசபையின் இறுதி அமர்வு நெற்றையதினம் சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

Related posts: