ஆனந்த சுதாகரனின் விடுதலை என்பது ஒரு அரசியல் அல்ல, மனிதாபிமான நிலைப்பாடு – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட  மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்!

Thursday, April 19th, 2018

ஆனந்த சுதாகரனின் விடுதலை என்பது ஒரு அரசியல் அல்ல. அது ஒரு மனிதாபிமான நிலைப்பாடு என்பதையே நாம் வலியுறுத்த விரும்புகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட  மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தமிழ் அரசியல் கைதியாக சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஆனந்த சதாகரனின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக்கருத்து கிடையாது.

அண்மையில் சிறைவாசம் அனுபவித்துவரும் ஆனந்த சுதாகரனின் மனைவியார் உயிரிழந்த நிலையில் அவர்களது பிள்ளைகள் நிர்க்கதியான நிலையில் வழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது விடுதலையை விரைவுபடுத்துமாறு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திடம் கோரிக்கையினை முன்வைத்திருந்தமையையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஆனந்தசுதாகரன் விரைவில் விடுதலை செய்ப்பட்டு நிர்க்கதியாகியுள்ள அவரது பிள்ளைகளுடன் சேர்ந்து வாழவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதற்காக நாம் தொடர்ந்தும் பாடுபடுவோம் என்று தெரிவித்த ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் ,ஆனந்தசுதாகரனின் விடுதலை ஒரு அரசியலாக பார்க்காது அதை ஒரு மனிதாபிமான நிலைப்பாடாக பார்க்கவேண்டும் என்பதையே நாம் வலியுறுத்த விரும்புகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தையிட்டி கிழக்கு பகுதி மக்களது வாழ்வியல் நிலைமை தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக...
மஹிந்த வெல்ல வேண்டும் என விரும்பியவர் பிரபாகரன்: கோட்டபய வெல்ல வேண்டும் என விரும்பியவர் அமைச்சர் டக்...
அக்கரை சுற்றுலா மையத்தில் கலாச்சார சீரழிவினை தடுக்க பொலிஸ் பாதுகாப்பு வேண்டும் – ஈ.பி.டி.பியின் வலிக...