வேலணை பிரதேசம் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் – வேலணை பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Friday, April 27th, 2018

எமது வேலணை பிரதேச மக்கள் எதிர்கொண்டுவரும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவாக நிரந்தர தீர்வுகாண்பதற்கு பேதங்களை மறந்து ஒன்றுபட்டு உழைப்போம் என வேலணை பிரதேச சபையின் தவிசாளரும் குறித்த பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.

வேலணை பிரதேச சபையின் விசேட அமர்வு இன்றையதினம் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் பிரதேச சபை சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த விஷேட அமர்வில் வறட்சி காரணமாக வேலணை பிரதேசத்தில் குடிநீருக்கான பிரச்சினை நாளாந்தம் அதிகரித்து வருவதால் அதற்கான தீர்வை கண்டுகொள்வதுடன் அதனை விரைவாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.

இதன்போதே தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முன்னெடுப்புகளினூடாக இப்பகுதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக குடிநீருக்கான தீர்வுகள் பல மேற்கொள்ளப்பட்டதுடன் மக்கள் இலகுவாகப் குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளும் உருவாக்கிக் கொடுக்கப்பட்டது.

அந்தவகையில் தற்போது எமது பகுதியில் காணப்படும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு வேலணை பிரதேசத்தில் காணப்படும் நன்னீர் கிணறுகளை புனரமைப்பதுடன் சட்டவிரோதமான முறையில் குடிநீர் வெளியிலெடுத்து செல்லப்படாத வகையில் பாதுகாப்பு வேலிகளும் அமைப்பதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுக்கவேண்டும் அதற்காக நாம் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து மக்களின் நலனுக்காக ஒற்றுமையுடன் செயலாற்றுவோம் என்றார்.

Related posts: