அமரர் சிவஞானம் சரோஜினிதேவியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை !
Wednesday, April 25th, 2018
காலஞ்சென்ற அமரர் சீ.வி.கே.சிவஞானம் சரோஜினிதேவியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சார்த்தி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் வசந்தன் மற்றும் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் ஆகியோர் அன்னாரது பூதவுடலுக்கு அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தார்.
காலஞ்சென்ற அமரர் சரோஜினிதேவி வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் துணைவியார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
மக்களின் தேவைகளை உணர்ந்து செயற்றிட்டங்களை முன்னெடுக்கவேண்டும் - ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட நிர...
இலங்கை அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்தில் உள்ள இடைவெளியே தற்போதைய தேர்தல் இழுபறி நிலைமைக்கு கார...
தோழர் வசந்தன் (மாமா) அவர்களின் தாயார் அன்னம்மா காலமானார்!
|
|
|


