நியமனத்தை எதிர்பார்த்திருக்கும் தொண்டர் ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி!

Wednesday, March 7th, 2018

நேர்முகத் தேர்வுக்கு தோற்றிய 676 தொண்டர் ஆசிரியர்களும் தங்களுக்கான நியமனங்களை எதிர்பார்த்துள்ள நிலையில் அவர்களுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற 23/2 நியதி கேள்வி நேரத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுததுள்ளார். வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்ற சுமார் 1,050 பேருக்கான நேர்முகப் பரீட்சை கடந்த வருடம் யூலை மாதம் 28, 29, 30ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் பொது நூலகக் கட்டிடத்தில் மத்திய கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாகவும்,

நேர்முகப் பரீட்சை இடம்பெற்று சுமார் ஒரு மாதம் கழிந்த நிலையில், அதில் 676 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்றும், அவர்களில் ‘லொக் புக்’ தகுதி அடிப்படையில் 182 பேர் தெரிவு செய்யப்பட்டு, நியமனங்கள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டதாகவும், எனினும் இதுவரையில் எவருக்குமே நியமனங்கள் வழங்கப்படவில்லை என்றும் தெரிய வருகின்றது.

மேற்படி தொண்டர் ஆசிரியர்கள் சுமார் நீண்ட காலகட்டமாக மிகவும் பாதிப்புற்ற நிலையில் தமது கடமைகளை மேற்கொண்டு வருவதுடன், தற்போது வடக்கு மாகாண பாடசாலைகளில் ஆசியர்களுக்கான வெற்றிடங்கள் பல காணப்படுவதும் தாங்கள் அறிந்த விடயமாகும்.

இத்தகைய நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட 676 தொண்டர் ஆசிரியர்களுமே தங்களுக்கான நியமனங்களை எதிர்பார்த்துள்ள நிலையில், கடந்தகால யுத்த நிலைமைகள் காரணமாக ஏற்பட்டிருந்த இடப்பெயர்வுகளால் தங்களுக்குரிய ‘லொக் புக்’ தகுதிகளை இழந்துள்ள 494 தொண்டர் ஆசிரியர்களின் மாற்றீடு ஆவணங்களை (வரவு பதிவேடு, கருத்தரங்குகளில் கலந்து கொண்ட, பரீட்சைகளில் தோற்றிய பதிவுகள், பாட விதான விடயங்கள் போன்றவற்றினைக் கருத்தில் கொண்டு, மேற்படி 676 தொண்டர் ஆசியர்களுக்கும் நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து உதவ முடியுமா? என்றும் அவர் கேள்வி எழப்பியிருந்தார்.

Related posts:

யாழ் குடாநாட்டில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் - நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார் டக்ளஸ் தேவானந்தா ...
பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணத் தொகையை 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா? – அமை...
பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கருதி உடனடியாக முன்னெடுக்கப்படக்கூடிய ஏற்பாடுகள...