நுண்கலைத்துறைப் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Friday, April 7th, 2017

தமிழ் மக்களின் அருகிவருகின்ற பாரம்பரிய கலைகளைப் பேணிப் பாதுகாத்து, வளர்த்தெடுக்கும் வகையிலும், அத்துறைசார் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகள் என்ற வகையிலும், ஆசிரியர் ஆட்சேர்ப்புகளின்போது, நுண்கலைத்துறையையும் இணைத்து விண்ணப்பங்கள் கோருவதற்கும், அதனூடாக இவர்களுக்கு உரிய தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், தமிழ் மக்களின் அருகிவருகின்ற பாரம்பரிய நுண்கலைத் துறையை உயிர்ப்பித்தல், அவற்றைப் பேணிப்பாதுகாத்து, வளர்த்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் 2005ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரையில் இந்த நிறுவகத்தில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்துள்ள எந்தவொரு பட்டதாரிகளும் தங்களுக்குரிய தொழில்வாய்ப்புகளைப் பெறாத நிலையே காணப்படுகின்றதாகவும், அந்த வகையில் சுமார் 650 பட்டதாரிகள் இத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை எதிர்நோக்கியிருக்கின்றனர் என்றும் தெரிய வருகிறது.

இவ்வாறானதொரு நிலையில், 5 வருட கற்கை நெறியினைப் பூர்த்தி செய்துள்ள மேற்படிப் பட்டதாரிகள் விரக்தி நிலை அடைந்து தற்போது சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலை உருவாகியுள்ளதுடன், மேற்படித் துறை சார்ந்து ஏனைய மாணவர்களது நாட்டமும் குறைந்துள்ளது. எனவே, மேற்படி பட்டதாரிகளையும் ஆசிரியர்களுக்கான நியமனங்களின்போது இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வாழ்வின் எழுச்சி திட்டத்தின் மூலம் வறுமையை போக்கவும், வேலைவாய்ப்பை வழங்கவும் வழிவகை செய்ய வேண்டும்- ...
வடக்கு கிழக்கு மக்களை அந்நியமாகவே பார்க்கின்றீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!
கூட்டமைப்பின் அக்கறையின்மையால் தமிழர்களின் கோரிக்கைகள் மதிப்பிழந்து போகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ்...