43 ஊழியர்கள் 600 பசுக்களுடன் மூழ்கியது கப்பல்!

Friday, September 4th, 2020

ஜப்பான் கடற்பிராந்தியத்தில் 43 ஊழியர்கள், 6000 பசுக்களுடன் சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மூழ்கிய கப்பலில் இருந்து ஒருவர் ஜப்பான் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளார். Maysak சூறாவளி காரணமாக Gulf Livestock1 எனும் கப்பல் காணாமற்போயுள்ளது. குறித்த கப்பல் மூழ்குவதாக கிழக்கு சீனக் கடலிலிருந்து சமிக்ஞை அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து, கப்பலைத் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காணாமற்போன கப்பல் ஊழியர்களில் பிலிப்பைன்ஸ், நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா நாட்டவர்கள் அடங்கலாக 39 வௌிநாட்டவர்களும் இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய அலை ஒன்றினால் அடித்துச் செல்லப்பட்டதால் கப்பலில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு மூழ்கியதாக மீட்கப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த கப்பல் பணியாளர் கூறியுள்ளார். கப்பலில் இருந்தவர்களை மிதவைச் சட்டை அணியுமாறு அறுவுறுத்தப்பட்ட நிலையில், தாம் அதனை அணிந்துகொண்டு நீரில் குதித்ததாக அந்நபர் கூறியுள்ளார்.

Related posts: