கனடாவில் அதிகரித்து வரும் குரங்கம்மை நோய் – எச்சரிக்கும் சுகாதார தரப்பு!

Saturday, November 5th, 2022

கனடாவில் மொத்தம் 1,444 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒட்டாவா, கனடாவில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.

கடந்த வாரத்தில் 9 பேருக்கு மட்டுமே புதிதாக பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தன. இந்த பாதிப்பு அதிகரிப்பும் தொடர்ந்து குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில், திடீரென தொற்று எண்ணிக்கை உயர்ந்து உள்ளது.

இதன்படி, கனடாவில் மொத்தம் 1,444 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சிகிச்சைக்காகi வைத்தியசாலையில் சேர்ந்துள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்து உள்ளது.

இதுவரை தொற்று ஏற்பட்டவர்களில் ஒன்டாரியோ மாகாணத்தில் 688 பேரும், கியூபெக் மாகாணத்தில் 525 பேரும், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 179 பேரும், ஆல்பெர்ட்டா மாகாணத்தில் 41 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று, சாஸ்கத்சீவன் மாகாணத்தில் 6 பேரும், யுகோன் மாகாணத்தில் 2 பேரும் மற்றும் நோவா ஸ்காட்டியா, மணிடோபா மற்றும் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் தலா ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என அந்நாட்டு பொது சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

இதனை தொடர்ந்து, கனடாவின் நோயெதிர்ப்புக்கான தேசிய அறிவுறுத்தல் குழுவானது, தடுப்பு நடவடிக்கையாக குரங்கம்மை தடுப்பூசியை செலுத்தும்படி பரிந்துரை செய்துள்ளது.

இதன்படி, 2 டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அதிலும், அறிகுறிகள் அற்றவர்களுக்கே 2-வது டோஸ் செலுத்த வேண்டும் என தெரிவித்து உள்ளது. முதல் டோஸ் செலுத்தி 28 நாட்கள் கழித்து 2-வது டோஸ் செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த குரங்கம்மை பாதிப்பு, நோய் தொற்று கொண்ட நபரிடம் நேரடியான தொடர்பு கொண்டிருத்தல், கட்டியணைத்தல், முத்தமிடுதல், மசாஜ் அல்லது பாலியல் உறவு வைத்தல் உள்ளிட்டவற்றால் பரவ கூடும் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

Related posts:

உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரே தமிழ் அரசியல் தலைவர் டக்ளஸ் தேவானந்தா - கிழக்கு மக்கள் பெருமிதம்! ...
சொந்த மக்களுக்கு என்ன செய்தது கூட்டமைப்பு?  - அந்தக்கட்சி மாகாணசபை உறுப்பினர் சிவயோகம் கேள்வி!
ஈரானுக்குச் செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு விசா அனுமதி தேவையில்லை - ஈரானிய சுற்றுலாத்துறை அமைச்சு...