41 ஆயிரம் கோடி அபராதம் – பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடி!
 Monday, July 15th, 2019
        
                    Monday, July 15th, 2019
            
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ரெகோ நகரில் தங்கம் மற்றும் தாமிரம் ஆகிய வளங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுரங்க நிறுவனங்கள் இங்கு தங்கம் மற்றும் தாமிரம் வெட்டி எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் சிலி மற்றும் கனடாவை சேர்ந்த “டிசிசி” என்கிற கூட்டு நிறுவனத்துக்கு ரெகோ நகரில் சுரங்க பணிகள் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.
கடந்த 2011 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பலுசிஸ்தான் மாகாண அரசு திடீரென ரத்து செய்தது. இதை எதிர்த்து, அந்நிறுவனம் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அந்நிறுவனத்தின் ஒப்பந்தம் பாகிஸ்தான் சட்டத்துக்கு எதிரானது என கூறி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
அதனை தொடர்ந்து, அந்த நிறுவனம் இந்த விவகாரத்தை சர்வதேச நடுவர் கோர்ட்டுக்கு கொண்டு சென்றது. அங்கு இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதில் பாகிஸ்தான் அரசு சட்டவிரோதமான முறையில் ‘டிசிசி’ நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்வது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கு 5.97 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.41 ஆயிரம் கோடி) சர்வதேச நடுவர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. பாகிஸ்தான் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில் சர்வதேச கோர்ட்டின் இந்த உத்தரவு பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        