ரோனு தாக்கி வங்கதேசத்தில் 17 பேர் பலி!

Sunday, May 22nd, 2016

வங்காள தேசத்தை ‘ரோனு’ புயல் நேற்று தாக்கியது. இதன் காரணமாக நாட்டின் பெரும் பகுதியில் மணிக்கு பல கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இடைவிடாத மழையும் பெய்தது. மழையின் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மரங்கள் வேரோடு சாய்ந்தன.

தாழ்வான பகுதிகளில் வசித்து வருகிற லட்சக்கணக்கான மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சிட்டகாங்கில் உள்ள ஷா அமனாத் சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.

தெற்கு கடலோர பகுதி கிராமங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. லட்சக்கணக்கான குடிசைகள் இடிந்து விழுந்தன.

மழை தொடர்பான சம்பவங்களில் சிட்டகாங்கில் 8 பேர், போலா, காக்ஸ்பஜாரில் தலா 3 பேர், நோகாளியில் 2 பேர், பதுவாகாளியில் ஒருவர் என 17 பேர் பலியாகினர். 100–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.  புயல் நிவாரண பணிகளை வங்காளதேச அரசு முடுக்கி விட்டுள்ளது

Related posts: