4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பலி!
Thursday, January 24th, 2019
சிரியாவில் 4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 7 சிறுவர்கள் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சிரியா தலைநகர் டமாஸ்கசின் மத்திய பகுதியில் உள்ள மனாக்லியா என்ற இடத்தில் 4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் 7 பேர் இருந்துள்ளனர்.
கண்இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியதால் சிறுவர்கள் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
தீயில் கருகி 7 சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அட்லாண்டிக் கடல் பயங்கர நிலநடுக்கம்!
தீவிரவாத குழுக்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை - அமெரிக்க வெளிவிவகார செயலாளர்!
தேவை ஏற்படின் உக்ரேன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் ரஷ்யா தயங்காது - பெலரஸ் ஜனாதிபதி தெரிவிப்ப...
|
|
|


