கலே முகாமில் 7 ஆயிரம் அகதிகள்!

Saturday, August 20th, 2016

பிரான்ஸ் கலே துறைமுகப் பகுதியில் அமைந்துள்ளது ‘த ஜங்கிள்’ என அழைக்கப்படும் பெரும் அகதிகள் முகாம் உள்ளது.

குறித்த முகாமில் சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆண், பெண், சிறுவர்கள் உட்பட ஏராளமான அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சோமாலியா, சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகளும் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கலே துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள முகாமில் சுமார் 7 ஆயிரம் அகதிகள் வரை இருப்பதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, கடந்த ஜூன் மாதம் 2,415ஆக இருந்த அகதிகளின் எண்ணிக்கை தற்போது 6,901ஆக அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இதேவேளை, கலே முகாமிலுள்ள ஆயிரக்கணக்காக புகலிட கோரிக்கையாளர்களை வெளியேற்ற வேண்டும் என பிரான்ஸ் நிர்வாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: