தேவை ஏற்படின் உக்ரேன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் ரஷ்யா தயங்காது – பெலரஸ் ஜனாதிபதி தெரிவிப்பு – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Thursday, June 15th, 2023

தேவை ஏற்படின் உக்ரேன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் ரஷ்யா தயங்காது” என பெலரஸ் ஜனாதிபதி  அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இடம்பெற்றுவரும் போரானது தற்போது தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில் பெலரஸின் ஜனாதிபதியும் ரஷ்ய ஜனாதிபதியின் நெருங்கிய நண்பருமான அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ள இக்கருத்தானது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” எனது நாட்டின் மீது ஆக்கிரமிப்பு ஏதேனும் நடந்தால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் நாம் தயங்க மாட்டோம் .

அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய ஒரு அவசியத்தை கடவுள் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். ஆனால் எங்கள் நாட்டின் மீது ஆக்கிரமிப்பு நடந்தால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயங்க மாட்டோம்.

ரஷ்ய ஜனாதிபதி புடினை எமது நாட்டில், தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.

தனது நாட்டின் மீது தாக்குதல் நடக்க அதிகளவான சாத்தியக்கூறுகள் இருப்பதால் இதனைச் செய்தாகவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” இவ் அறிவிப்பானது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: