பல்மைரா தொல்பொருள் சின்னங்கள் பலத்த சேதம்!

Tuesday, March 29th, 2016

சிரியாவில் உள்ள பழங்காலத்து நகரங்களில் ஒன்றான பல்மைராவை அரச படைகள் மீளக் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவுகளின் அளவை தொல்பொருள் நிபுணர்கள் மதிப்பிட்டு வருகின்றனர்.

பல்மைராவின் பழங்காலத்து கோயில்கள் சிலவும் நினைவுச் சின்னங்களும் ஐஎஸ் குழுவினரால் இலக்குவைத்து அழிக்கப்பட்டன. ஆனால், அங்குள்ள தொல்பொருள் பாரம்பரிய தலங்கள் பல இன்னும் முழுமையாக அழியாமல் இருப்பதையும் திருத்தக்கூடிய நிலையில் இருப்பதையும் படங்கள் காட்டுகின்றன.

பல்மைராவின் பழமைச் சின்னங்களை திருத்திக் கொடுப்பதற்கு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஹெர்மிட்டஜ் அருங்காட்சியகம் முன்வந்துள்ளது. இந்த நகரைக் கைப்பற்றுவதற்கு ரஷ்யாவின் விமானத் தாக்குதல்கள் உதவி புரிந்தமை குறிப்பிடத்தக்கது.

160328021828_palmyra_empat_640x360_afp_nocredit

Related posts: