2ஆம் உலகப்போரின் போது தயாரிக்கப்பட்ட விமானம் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்து : 20 பேர் பலி!
Monday, August 6th, 2018
2ஆம் உலகப்போரின் போது தயாரிக்கப்பட்ட விமானம் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள் சிக்கியதில் 20 பேர் உயிரிழந்தனர்.
விபத்துக்குள் சிக்கிய ஜேயு52 எச்பி-எஓடி என்ற சிறிய ரக விமானம் கடந்த 1939ஆம் ஆண்டு ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. டிசினோ நகரில் இருந்து, டியுபென்டார்ப் ராணுவ விமானத் தளத்துக்கு புறப்பட்டு சென்ற போது, ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியான பிஸ் செக்னாஸ் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அமெரிக்க அதிகாரியிடம் "இது எங்களுடைய நாடு" என சீன அதிகாரி கூறியதால் பெரும் பரபரப்பு!
போட்டி அரசு - ஒற்றுமை அரசு இடையே விரைவில் பேச்சுவார்த்தை!
வங்கதேசத்தில் பத்திரிகையாளர் கைது!
|
|
|


