போட்டி அரசு – ஒற்றுமை அரசு இடையே விரைவில் பேச்சுவார்த்தை!

Thursday, September 15th, 2016
லிபியாவில், வார இறுதியில், போட்டி அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கும் படைகள் நான்கு எண்ணெய் கிடங்குகளை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பிறகு, ஐக்கிய நாடுகளின் ஆதரவை பெற்றுள்ள ஓர் ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர் அவசர பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஒற்றுமை அரசாங்கம் தனது வருமானத்திற்காக நம்பியிருக்கும், ஆயில் கிரேஸிஸ்ண்ட் எனப்படும் பகுதியில் உள்ள அனைத்து எண்ணெய் வளங்களையும் தற்போது ஜெனரல் கலீஃபா ஹப்தாரின் போராளிக் குழு கட்டுப்படுத்துகிறது.

ஜெனரல் ஹப்தாரின் படைகள் இந்த எண்ணெய் உற்பத்தி நடவடிக்கைளில் தலையிடப் போவதில்லை என்று தெரிவித்த பிறகு, நாட்டின் தேசிய எண்ணெய் நிறுவனம் தனது ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான வேலைகளை ஆரம்பிகிறது.எண்ணெய் துறைமுகங்கள் மீதான ஆக்கிரமிப்பு லிபியாவின் வருங்காலம் மீது கேள்வியை எழுப்புகிறது என்று பிரதமர் பாயேஸ் -அல்-சராஜ் கூறினார்.

_91196767_syria

Related posts: