நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான  தடை நீடிப்பு!

Thursday, September 21st, 2017

தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கான தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்’றது.

தம்மை தகுதிநீக்கம் செய்யவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தாக்கல் செய்திருந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது 18 பேர் தகுதி நீக்கம் தொடர்பான சபாநாயகரின் உத்தரவுக்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

அத்துடன், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என ஏற்கெனவே விதித்திருந்த தடை மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் என்றும் நீதிபதி அறிவித்துள்ளார்.

இதேவேளை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டபேரவை செயலர் பூபதி, ஆளுந்தரப்பு பிரதம கொறடா ராஜேந்திரன் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதிக்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

Related posts: