சீனாவில் கடல் பனிக்கட்டியாகியதால்  நடுக்கடலில் சிக்கி மக்கள் தவிப்பு!

Friday, February 2nd, 2018

சீனாவில் கடும் குளிர் காரணமாக கடல் உறைந்து பனிக்கட்டி ஆகியதால் அங்குள்ள தீவு மக்கள் 3000 பேர் சிரமத்துடன் காணப்படுவதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள ஜியுஹீவா தீவு பகுதியில் கடல் முழுவதுமாக உறைந்து பனிக்கட்டியாக மாறியுள்ளது. இதனால் சீனா நாட்டு மக்கள் அன்றாட வாழ்க்கைசெயற்பாடுகளில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் லியாவோடாங் வளைகுடா கடல் பகுதியும் சுமார் 130 கிலோ மீற்றர் பகுதிக்குபனிக்கட்டியால் சூழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தின் மேற்பகுதி பனிக்கட்டியாக காணப்படுவதால் கப்பல் போக்குவரத்துக்கள்தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜியுஹீவா பகுதிக்கும் கடந்த 22 ஆம் திகதிக்கு பின்னர் கப்பல் சேவை நடைபெறவில்லை எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: