போலாந்தில் அமெரிக்க படை: தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்கிறது ரஷ்யா!

Friday, January 13th, 2017

போலந்திற்கு அமெரிக்காவின் டாங்கிகள் மற்றும் படையினர் அதிகளவில் அனுப்பப்பட்டுள்ளது தேசிய பாதுகாப்பிற்கு ஒரு அச்சுறுத்தல் என்று ரஷ்யா வர்ணித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ரஷ்யாவின் நலன்களுக்கு எதிர் நடவடிக்கையாக பார்க்கப்படுவதாகவும், அதுமட்டுமின்றி மூன்றாவது நாட்டில் அதுவும் ஐரோப்பிய நாடு அல்லாத ஒன்றில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாகவும் ரஷ்யா பேச்சாளரான டிமிட்ரி பாஸ்கோஃப் தெரிவித்துள்ளார்.

நேட்டோவின் கிழக்கு எல்லைப்பகுதியையொட்டி ஆயிரக்கணக்கான அமெரிக்க படையினர், டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் அனுப்பப்பட உள்ளன. ரஷ்யாவிடமிருந்து உடனடி அச்சுறுத்தலை எதையும் தான் காணவில்லை என்றும், ஆனால், பலத்தைப் பிரயோகிக்க இப்போது மேலும் வீறு கொண்டு வரும் ரஷ்யா தான் தயாராக இருப்பதாகவே காட்டியிருக்கிறது என்றும், உதாரணமாக கிரைமியாவில் இது நடந்திருக்கிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

_93541407_gettyimages-631532154

Related posts: