13 நாட்களின் பின் மீட்கப்பட்ட 72 வயது முதியவர்!
Tuesday, May 3rd, 2016
ஈக்குவேடர் நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 72 வயதான முதியவர் ஒருவர் 13 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீக்கப்பட்டுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி ஈக்குவேடர் நாட்டில் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவில் பதிவான இந்நிலநடுக்கத்தில் 650க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் நிலையில் 72 வயதான முதியவர் ஒருவர் 13 நாட்களின் பின்னர் இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
வெனிசுலா நாட்டின் மீட்புப் படையினர் மானாபி நகரின் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இவரை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்டவர் 72 வயதான மானுவேல் வஸ்கிஸ் என அடையாளம் காணப்பட்ட அவர், வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
|
|
|


