பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளின் சில உடன்பாடுகள் தோல்வி

Monday, July 24th, 2017

பிரெக்சிற்றிற்கு பின்னரான பிரித்தானியர்களினதும், ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களதும் எதிர்கால உரிமைகள் தொடர்பான உடன்பாட்டை எட்டுவதற்கு பிரித்தானியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் தவறியுள்ளன.

பிரித்தானியாவிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள பிரித்தானியர்கள் ஆகியோரின் எதிர்கால உரிமைகளை உறுதிபடுத்துவது தொடர்பான உடன்பாட்டை எட்டுவதிலேயே இருதரப்பும் தோல்வியடைந்துள்ளன.

பிரெக்சிற் பேச்சுவார்த்தையின்போது முன்வைக்கப்பட்ட 44 பிரச்சினைகளில் 22 பிரச்சினைகள் தொடர்பில் உடன்பாடு எட்டுவதற்கு ஐரோப்பிய ஒன்றியமும், பிரித்தானியாவும் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 14 பிரச்சினைகளில் அடிப்படை வேறுபாடுகள் காணப்படும் அதேவேளை, ஏனைய 8 விடயங்கள் தொடர்பில் மேலும் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளின்போது இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களின் உரிமைகளுக்காக பிரசாரம் செய்துவரும் குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: