100 பயணிகளுடன் சென்ற ரஷ்ய விமானத்தை காணவில்லை!
Sunday, December 25th, 2016
ரஷ்யாவின் சோச்சி நகரிலிருந்து சுமார் 100 பயணிகளுடன் சென்ற Tu-154 ரஷ்ய விமானம் ஒன்று காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் அது ராடர் கட்டமைப்பில் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறித்த பயணிகள் விமானம் காணாமல் போயுள்ளதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் உறுதி செய்துள்ளார்.
விமானம் பயணத்தை தொடங்கி 20 நிமிடத்தில் காணாமல் போயுள்ளதாக தெரிய வருகிறது.சிரியாவின் Latakia மாகாண வான்பரப்பில் விமானம் பறந்து கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளது. இதன்பின்னணியில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Related posts:
ட்ரம்ப் தனது பொறுப்பை தட்டிக்கழித்துள்ளார் - கத்தலின் வின்
போயஸ் கார்டனில் தேடுதல் - ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் முடக்கம்!
உணவு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் வடகொரிய அதிபர்...
|
|
|


