உணவு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் வடகொரிய அதிபர் சபதம்!

Sunday, January 2nd, 2022

2022-ல் வட கொரியாவின் உணவு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் கிம்ஜோங் உன் (Kim Jong Un) விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறிள்ளார்.

சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளுக்கு பெயர் போன வடகொரிய அதிபர், விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

வடகொரியாவில் தற்போது மிகப்பெரும் அளவுக்கு உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, எவ்வளவு விலைக்கு விற்பனையானாலும் கொடுக்க பணம் இருக்கிறது, ஆனால் உணவுப் பொருள் இல்லை என்ற நிலைமைக்கு வட கொரியா சென்றது.

நிலைமை இப்படி இருக்க, அணு ஆயுதங்களை புதிது புதிதாக அந்நாடு உருவாக்கி பரிசோதனை செய்து வருவது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் புத்தாண்டில் நாட்டின் பாதுகாப்பு, தூதரக உறவு உள்ளிட்டவற்றை தாண்டி உணவு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது- பொதுமக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வு காண அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

கொரோனா பிரச்னை முக்கியமான சவால். அதனை எதிர்கொள்வதற்கு அரசு கூடுதல் நடவடிக்கை எடுக்கும். கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டிருப்பது, வட கொரியா தனது இராணுவ பலத்தை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

000

Related posts: