ட்ரம்ப் தனது பொறுப்பை தட்டிக்கழித்துள்ளார் – கத்தலின் வின்

Monday, June 5th, 2017

உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவதில் தனக்கான பொறுப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைவிட்டுள்ளதாக ஒன்ராறிய முதல்வர் கத்தலின் வின் தெரிவித்துள்ளார்.

பச்சைவீட்டு வாயு விளைவுகளை குறைப்பதற்காக 195 நாடுகள் இணைந்து கடந்த 2015 ஆம் ஆண்டு பரிஸில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

பரிஸினால் முன்வைக்கப்பட்ட குறித்த உடன்படிக்கை அமெரிக்காவுக்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் பலர் வேலையின்றி தவிக்க நேரிடும் என்றும் தேசிய இணையாண்மையை பாதிக்கும் எனவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அத்தோடு குறித்த ஒப்பந்தம் அமெரிக்க பொருளாதாரத்தை பின்னடைவுக்கு கொண்டு செல்லும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ட்ரம்பின் தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின், அமெரிக்கா விலகிக் கொண்டாலும் துணைத்தேசிய அரசாங்கங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு முக்கியமானது என்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்து ஏனைய தலைவர்களுடன் குறிப்பாக அமெரிக்க ஆளுநர்களுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவதாகவும் உறுதியளித்துள்ளார்.

Related posts: