வட இந்தியாவில் கடற் பகுதியில் ஏற்படும் சூறாவளிக்கு பெயர் சூட்டுவது யார்?

Thursday, June 6th, 2019


நிலவிவரும் சீரற்ற காலநிலையால், வட இந்தியாவில் கடற் பகுதியில் ஏற்படும் சூறாவளி காற்றுக்கு பெயர் ஒன்றை முன்மொழியுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் ஆலோசனையொன்றைக் கோரியுள்ளது.

இதற்கான ஆலோசனையை முன்வைக்குமாறு திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதன்போது பொருத்தமான இலகுவான வகையிலும் இந்த பெயர் அமைந்திருப்பதுடன் இது ஆங்கில மொழியில் ஆகக்கூடிய 8 எழுத்துக்களை கொண்டிருக்கவேண்டும்.

மேலும், தெரிவு செய்த பெயரை இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தமது திணைக்களத்துக்கு சமர்பிக்குமாறு வளிமண்டல திணைக்களம் பொதுமக்களை பணித்துள்ளது.

Related posts: