செல்வந்த நாடுகள் அகதிகளுக்கு போதிய அளவு உதவவில்லை: அம்னெஸ்டி!

Wednesday, October 5th, 2016

அகதிகள் தொடர்பான தமது பொறுப்புக்களை உலகின் செல்வந்த நாடுகள் தட்டிக்கழிப்பதாக அம்னெஸ்டி அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

மிகக் குறைவான அகதிகளையே ஏற்கும் இந்த நாடுகள், அகதிகள் மறுவாழ்வு தொடர்பில் குறைந்த அளவே உதவி செய்வதாகவும் கூறியுள்ள அம்னெஸ்டி அமைப்பு, இவை தமது செல்வ வளம், நாட்டின் பரப்பளவு மற்றும் வேலையின்மை சதவீதம் ஆகியவற்றுக்கேற்ப மேலதிக அகதிகளை ஏற்கவேண்டும் என்றும் கோரியுள்ளது.

இதே வேளை, லிபிய கடற்கரையில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவை நோக்கி ஆயிரக்கணக்கான அகதிகள் ஆபத்தான பயணம் மேற்கொளும் போக்கு தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது குளிர்காலம் துவங்குவதற்கு முன் கடலைக்கடக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இத்தகைய பயணங்களின் எண்ணிக்கை சென்ற வாரம் அதிகரித்துள்ளன. நேற்றுமுன்தினம் (03) மட்டும் ஆறாயிரத்துக்கும் அதிகமான அகதிகள் படகுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

p049z6hb

Related posts: