55 ஆண்டுகளிபின் கியூபாவுக்கு முதல் அமெ. தூதுவர் நியமனம்!

Thursday, September 29th, 2016

கடந்த அரை நூற்றாண்டுகளில் முதல் முறையாக கியூபாவுக்கு அமெரிக்க தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வழமையாக மற்றும் ஆரோக்கியமான உறவுக்கான அடித்தளம் என்று இந்த நியமனம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.

குடியரசு கட்சியிர் சிலரிடம் எதிர்ப்பு இருக்கும் நிலையில் இந்த நியமனத்திற்கு கொங்கிரஸ் அவையின் ஆதரவு கிடைப்பது குறித்து சந்தேகம் உள்ளது. 55 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜெப்ரி டிலொரன்டிஸ், ஹவானாவில் கடந்த ஆண்டு ஜூலையில் திறக்கப்பட்ட புதிய அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றுவார் என அவிக்கப்பட்டுள்ளது.

1961 கியூப புரட்சிக்கு பின்னர் முறிந்த உறவை மீண்டும் ஆரம்பிக்க பராக் ஒபாமா மற்றும் கியூப ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோவுக்கு இடையில் இணக்கம் எட்டப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான விமான போக்குவரத்து தளர்த்தப்பட்டபோதும் கியூபா மீதான அமெரிக்க பொருளாதார தடைகள் தொடர்ந்து நீடிக்கிறது.

டிலொரன்டிஸின் நியமனத்திற்கு செனட் சபையின் அங்கீகாரம் கட்டாயமாகும். எனினும் கொம்மியுனிஸ நாட்டுக்கான தூதுவர் நியமனத்தை முடக்கப்போவதாக குடியரசு கட்சி செனட்டர்கள் சிலர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

15.1-720x480

Related posts: