மரணதண்டனை தீர்ப்பு எதிர்கொள்ளவள்ள பிரித்தானியா தம்பதி!

Saturday, September 21st, 2019


பாகிஸ்தானில் இருந்து ஹெராயின் போதைப் பொருள் கடத்த முயன்று சிக்சிக்கொண்ட பிரித்தானியா தம்பதியினர், மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறப்படுகிறது.

Sialkot சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரித்தானியா தம்பதியினர், 26 வயது முகமது தாஹிர் அயாஸ் மற்றும் அவரது மனைவி 20 வயதான இக்ரா உசேன் ஆகியோர் என பாகிஸ்தான் அதிகாரிகள் பெயர் வெளியிட்டுள்ளனர்.

West Yorks-ன் Huddersfield-ஐ சேர்ந்த தம்பதியினர் வியாழக்கிழமை எமிரேட்ஸ் ஏர்லைன் விமானம் (EK-621) மூலம் துபாய் வழியாக பிரித்தானியா செல்ல முயன்றுள்ளனர்.

விமான நிலைய பாதுகாப்பு படை நடத்திய சோதனையில், பெண்ணின் ஆடைகளில் 25 கிலோ தரமான ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாக்கெட்டுகள் பல ஆடைகளின் வெவ்வேறு பகுதிகளில் வைத்து தைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தம்பதியினர் பாகிஸ்தானின் Sialkot-ல் இருந்து துபாய் வழியாக பிரித்தானியாவுக்கு கடத்த முயற்சித்ததாக கூறி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஹெராயினை பறிமுதல் செய்த அதிகாரிகள் , தம்பதியர் மீது வழக்கு பதிவு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் விலை சர்வதேச சந்தையில் 2 மில்லியன் ரூபாய் என்று கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பிரித்தானியா தம்பதியினர் பின்னர் மேலதிக விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற பெரிய அளவிலான போதைப்பொருட்களைக் கடத்துவதற்கு பாகிஸ்தானில் மிகக் கடுமையான சட்டங்கள் உள்ளன. தம்பதியினர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் வழங்கக்கூடும் என கூறப்படுகிறது.

பிரித்தானியா வெளியுறவு அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: பிரித்தானியா தம்பதியினர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அதிகாரிகளிடமிருந்து நாங்கள் விரைவாக கூடுதல் தகவல்களைத் கோரியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: