பேருந்து கவிழ்ந்து விபத்து 23 பேர் உயிரிழப்பு!
Friday, October 4th, 2019
பெரு நாட்டில் பேருந்து சாலையில் இருந்து 300 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளதுடன், இந்த பேருந்து கஸ்கோவில் உள்ள மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டைஇழந்து சாலையில் இருந்து 300 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
மேலும் சுமார் 20 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதுடன், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
அரசு ஊழியர்கள் அலுவலகக் கணினியிலிருந்து இணையத்தைப் பயன்படுத்த தடை!
பிக் பென் பராமரிப்பு செலவு இருமடங்காக உயர்வு!
ஜேர்மனியில் உலங்குவானூர்தி விபத்து : விமானி பலி !
|
|
|


