புதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது சீனா!

Monday, December 9th, 2019


சீனாவின் சாங் குவாங் செயற்கைகோள் தொழில் நுட்ப நிறுவனம் இந்த செயற்கைகோளை தயாரித்துள்ளது.

இது உயர் தொலை உணர்வுத்திறன், அதிவேக தரவு பரிமாற்ற வசதி உள்ளிட்ட அதிநவீன தொழில் நுட்பங்களை கொண்டதாகும்.

குறித்த செயற்கைகோள் டையுவான் ஏவு மையத்தில் இருந்து நேற்று காலை 10.55 மணிக்கு சீனா விண்ணில் செலுத்தியது.

தற்போது இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக அதன் சுற்றுபாதையில் நிலை நிறுத்தப்பட்டு விட்டது.

இந்த செயற்கைகோள் விவசாயம், வன இயல், வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான தொலைநிலை உணர் திறன் தரவு மற்றும் சேவைகளை வழங்க உதவிகரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: