சவூதி அரேபிய தாக்குதலை கண்டிக்கின்றது இலங்கை!
 Wednesday, September 25th, 2019
        
                    Wednesday, September 25th, 2019
            
சவூதி அரேபியாவில் அப்கைக் எண்ணெய் சுத்திகரிக்கும் ஆலை மற்றும் குரைஸ் எண்ணெய் வயலை குறிவைத்து நடாத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை இலங்கை கண்டிப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
குறித்த அறிக்கையில், முப்பது ஆண்டுகளாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாடு என்ற வகையில், இலங்கை இந்த வேதனையை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் தெரிவிப்பதில் உறுதியாக உள்ளது.
மத்திய கிழக்கின் நிலையான தன்மை உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமானதாவதுடன், அமைதியான பேச்சுவார்த்தைகள் மற்றும் உரையாடல்கள் மூலம் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் விரைவில் தமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் என இலங்கை நம்புகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
டிரம்புக்கு சி.ஐ.ஏ இயக்குநர் எச்சரிக்கை!
கொரோனா தொற்று: சர்வதேச கிரிக்கட் பேரவையும் பாதிப்பு!
உக்ரைன் போர் எதிரொலி - ரஷ்ய விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        