பர்கா அணிய சுவிஸ்சர்லாந்தில் தடை!

Friday, September 22nd, 2017

பொது இடங்களில் முகத்திரை மற்றும் புர்கா அணிய தடை விதிக்கும் புதிய மசோதாவிற்கு சுவிட்சர்லாந்து நாட்டு பாராளுமன்றம் ஆதரவு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸ் மாகாணங்களில் ஒன்றான St Gallen மாகாண அரசு இப்புதிய மசோதாவிற்கு ஆதரவு அளித்துள்ளது. சுவிஸில் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றான சுவிஸ் மக்கள் கட்சி பொது இடங்களில் முகத்திரை மற்றும் புர்கா அணிவதை தடை செய்ய வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளது.

பொது இடங்களில் பெண்கள் புர்கா மற்றும் முகத்திரை அணிந்து செல்வதால் பாதுகாப்பின்மை ஏற்படுகிறது.மாகாண பாதுகாப்பிற்காக இதனை தடை செய்ய வேண்டும் என சுவிஸ் மக்கள் கட்சி வலியுறுத்தியது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்தாலும் மசோதா மீது விவாதம் நடத்தப்படும்.இந்த விவாதத்திற்கு பின்னர் மாகாண பொதுமக்கள் முன்னிலையில் வாக்கெடுப்பு நடைபெற்று அதில் பெரும்பான்மை கிடைத்தால் இம்மசோதா நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: