வெனிசுவேலாவில் கசப்பான அரசியல் பிரச்சினைகளில் போப் பிரான்சிஸ் தலையீடு!

Tuesday, October 25th, 2016

 

வெனிசுவேலா நாட்டின் கசப்பானஅரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி பிரச்சினைகளில் , போப் பிரான்சிஸ் ஒரு பரபரப்பான அளவில் தலையிட்டுள்ளார்.

அதிபர் நிக்கோலா மதுரோவுக்கும், போப் பிரான்சிசுக்கும் இடையில் வத்திக்கானில் நடைபெற்ற தனிப்பட்ட உரையாடலின்போது, அவர் சோஷலிச அதிபர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இடையிலான ஒரு பேச்சுவார்த்தையை மத்யஸ்தம் செய்து நடத்த விரும்புவதாகக் கூறினார்.

அடுத்த ஞாயிறு அன்று வெனிசுவலே தீவான மார்கரிட்டாவில் முறையான பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக வெனிசுவேலாவில் உள்ள போப் ஆண்டவரின் தூதர் கூறியுள்ளார்.

ஆனால் இணையத்தில் ஒளிபரப்பான இது குறித்த கருத்துகளில் , எதிர்க்கட்சித் தலைவர் என்கிரிகே கேப்ரிலேஸ் எந்தப் பேச்சுவார்த்தையும் தொடங்கப்படவில்லை என்றும் புதிய பேச்சுவார்த்தைக்கான அறிவிப்பு அரசின் சூழ்ச்சி என்றும் தெரிவித்தார்.

_92076853_one

Related posts: