சட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி!

Tuesday, August 13th, 2019

அமெரிக்காவில் தங்கியுள்ள சட்டவிரோத குடியேறிகளை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்கும் நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்கிறார். இதற்காக புதிய சட்டங்களை அவர் அமுலாக்கவுள்ளார்.

புதிதாக அமுலாக்கப்படவுள்ள பொதுகட்டண சட்டத்தின் கீழ், உணவு உதவி மற்றும் பொது தங்குமிட வசதி என்பன சட்டவிரோத குடியேறிகளுக்கு கிடைக்கப்பெறாமல் போகவுள்ளது.

இவ்வாறான பொது உணவு உதவித்திட்டம் உள்ளிட்ட விடயங்களில் தங்கியுள்ள சட்டவிரோதகுடியேறிகளின் குடியுரிமைக்கான அல்லது வீசா நீடிப்புக்கான விண்ணப்பங்கள் இரத்து செய்யப்படும். இது அவர்களை மேலும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. இந்த சட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதி முதல் அமுலுக்குவரவுள்ளது.

Related posts: