பிரித்தானிய நாடாளுமன்றத்தை இடைநிறுத்த கடும் எதிர்ப்பு!

Thursday, August 29th, 2019

பிரித்தானிய நாடாளுமன்றத்தை இடைநிறுத்த, அந்த நாட்டின் பிரதமர் மேற்கொண்ட தீர்மானத்துக்கு கடும் எதிர்ப்புகள் வெளியாக்கப்பட்டுள்ளன.

இதற்கு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை தெரிவித்திருப்பதோடு, லண்டனில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு எதிரான மனுவில் மில்லியன் கணக்கான மக்கள் கைச்சாத்திட்டிருப்பதாகவும் அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய நாடாளுமன்றத்தை செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் 5 வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு, பிரதமர் பொரிஸ் ஜோன்சன் முன்வைத்த கோரிக்கையை மஹாராணியார் அங்கீகரித்துள்ளார்.

இதன்மூலம், உடன்படிக்கைகள் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுகின்ற விடயத்தில் விவாதிப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சந்தர்ப்பம் இல்லாமல் போய் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விடயத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்று, ஆளுங் கட்சியின் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Related posts: