வட கொரியா வெள்ளத்தில் 60 பேர் உயிரிழப்பு: 44,000 பேர் இடம்பெயர்வு!

Wednesday, September 7th, 2016

வட கொரியாவில் பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி 60 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

வட கொரியாவின் டியூமென் ஆற்றில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.ஆற்றின் அருகேயுள்ள மியூஸன், ஹோயர்யோங் பகுதிகளும் தொடர் மழையால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இதுவரையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60 ஆக உள்ளது.44,000 குடும்பங்கள் வீடுகளை இழந்து தவித்து வருவதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவித்துள்ளது.வெள்ளத்தில் சிக்கியுள்ள பகுதிகளில் மக்களைத் தொடர்பு கொள்வது மிகவும் சவாலாக உள்ளதாகவும் தாற்காலிக முகாம்கள், உணவு, மருந்து, குடிநீர் ஆகியவை முக்கியத் தேவைகளாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் 9,000 கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. இதேவேளை, 10,000 ஹெக்டெயர் பரப்பிலான நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகியுள்ளதாக வட கொரிய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

korea-house-roof_2293109k

Related posts: