வெனிசுவெலாவின் அரசியல் நெருக்கடியை தீர்க்க பேச்சுவார்த்தை!

Monday, October 31st, 2016

வெனிசுவெலா நாட்டின் தீவிர அரசியல் நெருக்கடியை தீர்க்க, இந்த வருடம் முதல்முறையாக அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் கலந்து ஆலோசிக்க ஒன்று கூடுகின்றன.

வத்திக்கானின் தூதர் மற்றும் பிற சர்வதேச மத்யஸ்தர்களால் கண்காணிக்கப்படவுள்ள இந்த பேச்சுவார்த்தையில், அதிபர் நிக்கோலஸ் மடூரோ கலந்து கொள்ளவுள்ளார்.

அதிபர் மடூரோ, பதவியை விட்டு விலக வேண்டுமா என்பது குறித்தும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமா என்பது குறித்தும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்கட்சியினர் கோருகின்றனர்.

எதிர்கட்சியினர் வன்முறையை கைவிட வேண்டும் என்றும் வலது சாரி பொருளாதார கொள்கைகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் வெனிசுவெலா அரசு வலியுறுத்தியுள்ளது.தலைநகர் கராகஸிற்கு அருகில் அடக்கும் இந்த சந்திப்பு இந்த வாரம் நடந்த பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குப் பின் வருகிறது.மேலும் அடுத்த சந்திப்பு வரும் வியாழனன்று திட்டமிடப்பட்டுள்ளது.

_92158635_gettyimages-619321822

Related posts: