நைஜரின் உறுதியற்ற தன்மையை வாக்னர் பயன்படுத்துவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் குற்றச்சாட்டு!

Wednesday, August 9th, 2023

ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்றுள்ள நைஜரின் உறுதியற்ற தன்மையை ரஷ்யாவின் வாக்னர் ஆயுதப்படையினர் ‘சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக” அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நைஜர் ஜனாதிபதி மொஹமட் பாஸம் (Mohamed Bazoum) பதவியில் இருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கு இராணுவ ஆட்சி இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில் நைஜரின் அண்டைய நாடான மாலியில் இருப்பதாக அறியப்படும் வாக்னர் ஆயுதக் குழுவின் தரப்பினரிடம் இந்த விடயம் தொடர்பில் உதவிகள் கோரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

எனினும் நைஜரின் ஆட்சிக்கவிழ்ப்பை ரஷ்யாவோ அல்லது வாக்னர் ஆயுதக் குழுவினரோ தூண்டியதாக தாம் எண்ணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: