ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!

Sunday, September 24th, 2017

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி நடுத்தர தூரம் சென்று இலக்கை தாக்கும் புதிய ஏவுகணையை ஈரான் வெற்றிகமாக பரிசோதித்துள்ளது.

அணு ஆயுதங்கள் தயாரிப்பு, ஏவுகணை பரிசோதனை போன்றவற்றில் ஈடுபட்டு வந்த பாரசீக வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈரான், சர்வதேச நாடுகளின் தடையை மீறி ஏவுகணை பரிசோதனை செய்யப் போவதாக அறித்திருந்தது.

அதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற ராணுவ அணிவரிசையில் ஈரான் தயாரித்த புதிய ஏவுகணையான கோராம்ஷர் ஏவுகணை இடம்பெற்றிருந்தது.இந்நிலையில், நடுத்தர தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அந்த புதிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து விட்டதாக ஈரான் அரசு இன்று அறிவித்துள்ளது.இது போன்ற அணு ஆயுத சோதனை நடத்துவது 2015-ம் ஆண்டில் போடப்பட்ட அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை மீறுவதாகும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.அவரது எச்சரிக்கையை மீறி ஈரான் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.இந்த ஏவுகணை பல ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் திறன் வாய்ந்தது.இதன் மூலம் அருகில் உள்ள நாடுகளான இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவை எளிதில் தாக்கலாம்.மேலும், இது நாட்டின் ராணுவ சக்தி மற்றும் பாதுகாப்பை அதிகப்படுத்துவதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது

Related posts: