உரி பயங்கரவாத தாக்குதல்:பாகிஸ்தானில் இருந்து சில மணி நேரத்திற்கு முன்பு எல்லையை தாண்டிய பயங்கரவாதிகள்!

Friday, September 23rd, 2016

உரியில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் சில மணி நேரத்திற்கு முன்னரே பாகிஸ்தானிலிருந்து எல்லையை தாண்டி உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி ராணுவ முகாமில் அண்மையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்திவருகின்றனர். இவ்விவகாரத்தில் பாதுகாப்பு கோளாறுகளை தேசிய புலனாய்வு பிரிவு அடையாளம் கண்டு உள்ளது. ராணுவ முகாமை சுற்றிலும் புதர்களும் உயரமாக புற்களும் வளர்ந்து கிடப்பதால் தீவிரவாதிகள் சுலபமாக மறைந்து நகர்ந்திருக்க முடிந்துள்ளது. இங்குதான் வேலியை வெட்டி தீவிரவாதிகள் உள்ளே புகுந்துள்ளனர் என்று தேசிய புலனாய்வு பிரிவு கூறிஉள்ளது.

ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதிகள் 4 பேரும் சிறப்பு படையினரால் 15 நிமிடங்களில் சுட்டு வீழ்த்தப்பட்டனர். பயங்கரவாதிகள் முக சவரம் எடுத்திருந்தது, அவர்கள் அப்போதுதான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டிஉள்ளனர் என்பது புலப்படுகிறது. பயங்கரவாதிகள் இரண்டு இடங்களில் எல்லை வேலிகளை ’கட்’ செய்து பயங்கரவாதிகள் உள்ளே நுழைந்து உள்ளனர். தடுத்து நிறுத்துவதற்கு பாதுகாப்பு படையினர் யாரும் இல்லாத காரணத்தினால் அவர்கள் எளிமையான முறையில் உள்ளே நுழைந்து உள்ளனர். அவர்கள் கோல்ப் மைதானத்தை கடந்தது மற்றும் தற்காலிக கழிவறை பகுதிக்கு சென்றதை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

காலை கழிவறை பகுதியில் நின்ற பாதுகாப்பு படையினரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்து உள்ளனர், தப்ப முயன்ற பாதுகாப்பு படையினரையும் குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்திஉள்ளனர். உடனடியாக வெடிப்பொருட்களை கூடாரங்கள் மீது எரிந்து உள்ளனர், இதனால் கூடாரங்கள் தீ பிடித்து எரிந்து உள்ளது. பின்னர் தப்ப முயன்ற பாதுகாப்பு படையினரை பயங்கரவாதிகள் சுட்டு உள்ளனர். இதனையடுத்து சிறப்பு படையினர் சென்று பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிடங்களில் 4 பயங்கரவாதிகளையும் சுட்டு வீழ்த்தினர் என்று உயர்மட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளன.

Untitled-1 copy

Related posts: