பிரித்தானியா – அமெரிக்காவை அச்சுறுத்தும் ரஷ்யா!

Saturday, February 18th, 2017

அதிநவீன போர் விமானங்களை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ள ரஷ்யா, அந்த விமானம் குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போருக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கும் ரஷ்யா அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவை வீழ்த்தும் நோக்கில் இந்த போர் விமானங்களை வாங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் Sukhoi-35s என்ற போர் விமானத்தை வாங்கவுள்ளதாகவும், அதற்கான சோதனை ஓட்டத்திலும் ரஷ்யா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விமானம், அதிவேகமாக செயல்படும் திறன் கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில். குறித்த விமானத்தை ஏற்கனே சீனா வங்கியுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், அந்த விமானத்தில் பல கெமராக்கள் பொருத்தப்பட்டு அதன் ஆற்றல் மற்றும் திறன் என்பன குறித்து கண்காணிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விமானத்தின் வேகம் 36,000 அடி உயரத்தில் Mach 2.25 அளவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 8000kg வெடி பொருட்களை கொண்டு செல்லக்கூடியது எனவும் கூறப்படுகின்றது.

இந்த விமானம் F-35 மற்றும் யூரோபைட்டர் டைபானை (RAF) விமானங்களை விட மிக வேகமாக செயல்படும் திறன் கொண்டுள்ளது.

இதேவேளை, Sukhoi-35s போர் அமெரிக்காவின் புதிய போர் விமானமான F-35ஐ வீழ்த்த கூடியது என சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: