நியூஸிலாந்தைத் தாக்கிய சுனாமி…!

Monday, November 14th, 2016
நியூஸிலாந்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, அங்கு சுனாமி தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சி பகுதியிலிருந்து சுமார் 95 கிலோமீற்றர் தொலைவில் 7.8 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் நியூஸிலாந்தின் வடகிழக்கு பகுதியை சுனாமி தாக்கியுள்ளது.சுனாமியின் முதலாவது அலை பாரியதாக காணப்படவில்லை என அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், இன்னும் சில மணித்தியாலங்களில் பாரியளவிலான கடலலைகள் எழக்கூடும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கிறைஸ்ட்சர்ச்சி பகுதியில் இரண்டு மீற்றர் உயரத்திற்கு அலை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், வெலிங்டன் பகுதியிலும் இதே போன்ற அலை வந்துள்ளதாக பி.பி.சி குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 2011ஆம் ஆண்டு குறித்த பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் 185 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1124705292Untitled-1

Related posts: