ரஷ்ய ஜனாதிபதி பிரான்ஸ் விஜயம் செய்யவுள்ளார்!

Sunday, May 28th, 2017

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் எதிர்வரும் திங்கட்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை பரிஸ் வேர்சைல்ஸ் மாளிகையில் வரவேற்கவுள்ளார்.

பிரான்ஸ்- ரஷ்ய நாடுகளுக்கு இடையிலான 300 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை விபரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சி ஒன்றினை ஆரம்பித்து வைப்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பிரான்ஸ் வருகைதரவுள்ள நிலையில் இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்வதற்கு சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்தும் என கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷகோவ் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஹொலாண்ட்டின் ஆட்சியிலிருந்து பரிஸ் மற்றும் மொஸ்கோவுக்கு இடையிலான நல்லுறவுகள் அதிகரித்து வருகின்றது. எனினும் சிரிய விவகாரங்களில் இரு நாடுகளும் முரண்பாடுகளை கொண்டுள்ளன.

அதேபோன்று உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது கடுமையான பொருளனாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக பிரான்ஸூம் விளங்குகின்றது.

கிழக்கு உக்ரேனில் மின்ஸ்க் சமாதான உடன்படிக்கைகளை நிறைவேற்றுவதில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை எனில் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை விரிவுபடுத்துவதற்கு மக்ரோங் ஆதரவளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: