ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான யோசனை தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதம்!
Friday, October 4th, 2019
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான யோசனை அந்த நாட்டின் நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளது.
இதன்பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் குறித்த யோசனை தொடர்பான தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிரதமர் பொரிஸ் ஜொன்சன், ப்ரெக்சிட் ஒப்பந்த விபரங்களை அறிவித்திருந்திருந்தார்.
இதன்படி வடக்கு அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தைக்குள் பொருள்களுக்காக தொடருந்து நிலைக்கும் என்பதோடு, சுங்க விடயங்களில் இருந்து வெளியேறும்.
இவ்வாறான யோசனைகள் வரவேற்கத்தக்கது என்றாலும் பிரச்சினைகள் இருக்கின்றன என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எது எவ்வாறாயினும், இந்த மாதம் 31ம் திகதியுடன் உடன்படிக்கையுடனோ அல்லது உடன்படிக்கை இல்லாமலோ ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் என்று பொரிஸ் ஜொன்சன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


