ஏவுகணைகளை சோதனை செய்ததா வடகொரியா..?

வடகொரியா அடையாளம் தெரியாத சில ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்து. தென்கொரிய கூட்டுப் படைகளின் தலைவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வடகொரியாவுடன் அணுஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதாக அமெரிக்க அறிவித்திருந்த நிலையில்; இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜப்பானை நோக்கிய கிழக்கு கடற்பரப்பில் இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், மேலதிக விபரங்களை வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், மேலதிக ஏவுகணை சோதனை நடவடிக்கைகள் குறித்து தமது இராணுவம் அவதானித்துக்கொண்டிருப்பதாக தென்கொரிய கூட்டுப் படைகளின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
கேரள ஆலயத்தில் நடந்த பரிதாபம்! பலியானோர் எண்ணிக்கை நூறைத்தாண்டியது!
வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை நீக்கி பேஸ்புக் சர்ச்சை!
ஏவுகணை இல்லாத இராணுவ அணிவகுப்பு : வடகொரியாவுக்கு நன்றி கூறிய டிரம்ப்!
|
|